• Fri. Oct 9th, 2026

24×7 Live News

Apdin News

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக நியமனம்

Byadmin

Oct 9, 2026


இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று வியாழக்கிழமை (8)  ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரே, குசல் மெண்டிஸ் டெஸ்ட் அணித் தலைவராக பொறுப்பேற்கும் முதல் தொடராக அமையவுள்ளது.

குசல் மெண்டிஸ் இலங்கை அணிக்காக இதுவரை 75 டெஸ்ட் போட்டிகள் உட்பட மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 343 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவரது அனுபவத்தை கருத்திற்கொண்டு டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.

By admin