• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத்: இந்த கிணற்று நீர் திடீரென தானாகவே அசைவது ஏன்? வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை

Byadmin

Aug 9, 2026


கிணற்று நீர் அசைவதைப் பார்க்க கிராம மக்களும் வந்தனர்.

பட மூலாதாரம், Rajesh ambaliya

படக்குறிப்பு, கிணற்று நீர் அசைவதைப் பார்க்க கிராம மக்களும் வந்தனர்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தின் வீர்பர்டா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் ‘தானாகவே அசைந்து கொண்டிருப்பதாக’ அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் கிணற்றின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஏதோ ஒரு காரணத்தால் கிணற்று நீர் தானாகவே அசைந்து கொண்டிருப்பது போன்று காட்சியளித்தது.

கிணற்று நீர் சிறிது நேரம் அமைதியடைந்து, சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து அசைவதாகக் கூறப்படுகிறது.

அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நேரில் சென்ற பிபிசி நிருபர் ராஜேஷ் அம்பாலியா உள்ளூர் மக்களிடம் பேசினார்.

கிணற்று நீர் அசையும் காணொளி வைரலானதை அடுத்து, ஏராளமான பொதுமக்கள் அதைப் பார்க்கத் திரண்டனர். ஆட்சியர் உள்பட துறை சார்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

By admin