• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி – ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!

Byadmin

Aug 12, 2026


ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன.

குரூப்-2, 2ஏ தேர்வு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இங்கு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

By admin