• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

கோழிக் கால் – கோழிக் கறி ஓர் ஒப்பீடு: கோழிக் கால் எந்த வகையில் தனித்துவமானது?

Byadmin

May 8, 2026


கொலாஜென், கோழியின் கால்கள், கோழிக்கறி, உணவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இறைச்சிக் கடைக்குச் சென்று கோழிக்கறி வாங்கும்போது, ‘ஈரல் வேண்டாம்’, ‘கோழியின் கழுத்துப் பகுதி வேண்டாம்’ அல்லது ‘லெக் பீஸ் வேண்டும்’, ‘நெஞ்சுப் பகுதி கறி வேண்டும்’ எனக் கேட்டிருப்போம்.

ஆனால், கோழியின் கால்கள் சமைப்பதற்கு வேண்டுமா, வேண்டாமா என யோசித்திருக்க மாட்டோம். கோழியின் இறகுகள், தோல் போலவே அதுவும் ஒரு தேவையற்ற கழிவுதான் எனப் பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், சிங்கப்பூரில் ஒரு கிலோ கோழிக் கால்களின் விலை 3.70 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் 276.13 ரூபாய்), அதுவே தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் மெக்சிகோவில் கோழிக்கறியைவிட கோழிக் கால்களின் விலை அதிகம்.

உலகளவில், கோழிக் கால்களுக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. வியட்நாம், சீனா, உஸ்பெகிஸ்தான் நாடுகள் உணவுத் தேவைக்காக மிகப்பெரிய அளவில் கோழிக் கால்களை இறக்குமதி செய்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனாவுக்கு ஏறத்தாழ 1,33,700 மெட்ரிக் டன் கோழிக்கால்களை ஏற்றுமதி செய்தது.

By admin