• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

கோவையில் காங்கிரஸ் நிர்வாகியை கடத்திச் சென்று தாக்கிய கும்பல்

Byadmin

Jul 5, 2026


கோவையில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தப்பட்டு தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடத்தல்

கோவை காங்கிரஸ் ஓபிசி அணி மாவட்ட தலைவராக இருப்பவர் தொழிலதிபர் தனசேகரன். இவரை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்றுள்ளது.

ஆனால் ஆள் மாறி இவரை கடத்தியுள்ளதாக தெரிகிறது. இதை உணர்ந்த அந்த கும்பல் அவரை காயங்களுடன் காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.

அவரிடமிருந்து அவரது கார், மொபைல் போன் மற்றும் வீட்டு சாவியை அக்கும்பல் பறித்துச் சென்றுள்ளது.

காயம்

காயமடைந்த தனசேகரன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அந்த கும்பல் தன்னிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

அந்த கும்பலில் உள்ளவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிரட்டல்

மேலும், இதுகுறித்து போலீசில் சென்று புகார் அளித்தால் வீடு தேடி வந்து கழுத்தை அறுத்து கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்ததாகவும் தனசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பரபரப்பு

காங்கிரஸ் ஓபிசி அணியின் மாவட்ட தலைவரே பட்டப்பகலில் கடத்தித் தாக்கப்பது கோவையில் அக்கட்சியினரையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin