• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

Byadmin

Jul 5, 2026


தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகன் – நகைச்சுவை-  குணச்சித்திரம் – கெடுமதியாளன்- என பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத பான் இந்திய அளவில் தயாராகும் திரைப்படத்தில் யோகி பாபு ,அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ .வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி .பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை நைன் லைட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் முத்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்,  ”ராணுவத்திற்கான பயன்பாட்டில் இருக்கும் விமானம் ஒன்று விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்தில் சிதறிய விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை தேடுகிறார்கள். இது தொடர்பான பயணத்தின் பின்னணியில் தான் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய நாயகன் முயற்சி செய்யும் போது.. அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் பரபரப்பான திரைக்கதை” என்றார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யோகி பாபு பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

By admin