• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை சீனாவில் விமர்சிக்கப்படுவது ஏன்?

Byadmin

Jul 5, 2026


சீனா, ஜப்பான், இந்தியா, சீனா- ஜப்பான் பகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி தனது சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோதியை தனது ‘மூத்த சகோதரர்’ என்று அழைத்திருந்தார், அதே நேரத்தில் பிரதமர் மோதி அவரைத் தனது ‘சகோதரி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் மீது சீனாவும் தனது பார்வையை வைத்திருந்தது.

இருதரப்பு ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது நாட்டை இலக்காகக் கொண்டோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என்று சீனா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சனாய் டகாயிச்சியின் இந்த பயணத்தின் போது, இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான மற்றும் அனைவரும் அணுகத்தக்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இதனை இப்பிராந்திய நாடுகளின் பொதுவான விருப்பங்களுக்கு எதிரானது என்று சீனா குறிப்பிட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சீன செய்தித் தொடர்பாளர் யு ஜிங், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜிகுனின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.

ஜப்பான் பிரதமர் டகாயிச்சியின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த குவோ, “சுதந்திரமான மற்றும் அனைவரும் அணுகத்தக்க இந்தோ-பசிபிக் என்று கூறப்படும் இந்த கருத்துரு, அமைதி, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான பிராந்திய நாடுகளின் பொதுவான அபிலாஷைகளுக்கு எதிராகச் செல்கிறது, இதற்கு ஒருபோதும் உண்மையான அங்கீகாரம் கிடைக்காது” என்று கூறியிருந்தார்.

By admin