• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

கோவையில் நகைத் திருட்டு வழக்கில் 2 எம்.பி.ஏ மாணவர்கள் கைது – மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடக் காரணம் என்ன?

Byadmin

Sep 5, 2026


கோவையில் மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதா? அதிகம் கவனிக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

கோவையில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் சேர்ந்து மூதாட்டி ஒருவரிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோர் அனுப்பிய பணத்தைச் செலவழித்துவிட்டதால், கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கல்லூரி மாணவர் மீதான இந்த நகைப் பறிப்பு வழக்கு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட என்ன காரணம்?

என்ன நடந்தது?

கோவை வெள்ளலூரில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் கோவிந்தராஜ், கடந்த 30ஆம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

By admin