• Wed. Jul 1st, 2026

24×7 Live News

Apdin News

‘சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்’ : த.வெ.க எம்.எல்.ஏவிடம் 35 கோடி பேரம் பேசப்பட்டதாகப் புகார் – என்ன நடந்தது?

Byadmin

Jul 1, 2026


தவெக எம்எல்ஏ, இளையராஜா, சபாநாயகர்

பட மூலாதாரம், Ilayaraaja

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

மாற்றுக் கட்சியில் இணைவதற்கு தன்னிடம் பேரம் பேசியதாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின்பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா கடந்த 29-ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், ‘சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் இந்தியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜீஸ் (ஐபிடிஎஸ்) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் ஒரு முக்கியக் கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேரில் சந்திக்க வேண்டும்’ எனக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வேறு பணிகளில் இருப்பதாகக் கூறி அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ளார். ‘ஆனால், மீண்டும் தன்னைத் தொடர்பு கொண்டு சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகப் பேசினர்’ எனவும் புகாரில் கூறியுள்ளார்.

By admin