• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கங்கள், சிறுத்தைகள் ‘தினமும் உலவும்’ கிராமத்தில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

Byadmin

Oct 28, 2026


நேர்காணலின்போதே கேட்ட கர்ஜனை - சிங்கங்கள், சிறுத்தைகளால் அச்சத்தில் குஜராத் கிராமம்

    • எழுதியவர், கோபால் கடேஷியா
    • பதவி, பிபிசி குஜராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அக்டோபர் 22, அன்று காலை, குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வளதார் கிராமத்தில், கோபர்பாய் கோஹில் என்பவரின் வீட்டுச் சுற்றுச்சுவர் வெளியே உள்ள சந்தைப் பகுதியில் ஒரு கன்று இறந்து கிடந்தது. அந்தக் கன்றின் கழுத்தில் ஆழமான காயங்கள் இருந்தன. மேலும் அதன் உடல் முழுவதும் ரத்தம் படிந்திருந்தது.

நடந்த சம்பவத்தை அச்சத்துடன் விளக்கிய கோபர்பாயின் மனைவி லாகுபென், “நான் இங்கே பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சத்தம் கேட்டது. அதனால் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.”

“அப்போது ஒரு பெண் சிங்கம் கன்றை பல்லால் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் சத்தம் போட்டேன். அதன்பிறகு அந்தப் பெண் சிங்கம் கன்றை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது” என்றார்.

“எனக்கு பயமாக இருந்தது. சிங்கங்கள் தினமும் கிராமத்திற்குள் வருகின்றன. இப்படியான சம்பவங்கள் நடந்தால் பயப்படாமல் இருக்க முடியுமா?” எனக் கேட்டார் அவர்.

விவசாயியான கோபர்பாய், அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஒரு பெண் சிங்கம் தனது இரண்டு குட்டிகளுடன் அவரது வீட்டின் அருகே வந்ததாகக் கூறுகிறார். அப்போது அது ஒரு கன்றின் கழுத்தைப் பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.



By admin