• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியா மீது ஐ.நாவில் பாகிஸ்தான் புகார் – ஓராண்டில் பாகிஸ்தான் சந்தித்த இழப்பு எவ்வளவு?

Byadmin

Apr 29, 2026


ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஜீலம் ஆற்றின் மீது கட்டப்பட்ட கீழ் ஜீலம் நீர்மின் திட்ட அணை

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஜீலம் ஆற்றின் மீது கட்டப்பட்ட கீழ் ஜீலம் நீர்மின் திட்ட அணையில் இருந்து, மே 6, 2025 அன்று வெளியேறும் நீர்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் ‘ஒருதலைப்பட்சமான முடிவை’ கவனத்தில் கொள்ளுமாறு பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தெற்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இஃப்திகார், பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் சார்பில் இந்தக் கடிதத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

இந்த விவகாரம் குறித்து இந்தியாவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான தூதரகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தியதோடு, நதி நீர் பகிர்வு தொடர்பான 1960-ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்திருந்தது.

By admin