• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

ஜுனேஜோ – கல்கோரா: பாகிஸ்தானில் ஓர் ஆடு திருட்டு இரு சமூக மோதலாக மாறி 48 உயிர்களை பறித்தது ஏன்?

Byadmin

Apr 29, 2026


ஜலால்பூரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி கட்டிடம். இரு உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான மோதலால் இது சிதிலமடைந்துள்ளது.
படக்குறிப்பு, ஜலால்பூரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி கட்டிடம். இரு உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான மோதலால் இது சிதிலமடைந்துள்ளது.

ஒரே ஒரு அறை கொண்ட மதரசாவில் சுமார் இரண்டு டஜன் குழந்தைகள் குர்ஆன் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மதரஸாவை ஒட்டியே பள்ளியின் இரண்டு கட்டடங்கள் உள்ளன. அதில் ஒன்று இடிந்து போய் கிடக்கிறது, மற்றொன்று ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போயுள்ளது.

இங்கு நிலவும் இந்த அமைதிக்குக் காரணம், இரு உள்ளூர் சமூகங்களுக்கு இடையே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மோதலாகும். இது இங்கிருக்கும் பள்ளிகளையும் பாதித்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகார்பூர் மாவட்டத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ‘ஜுனேஜோ’ மற்றும் ‘கல்கோரா’ சமூகங்களுக்கு இடையே நிலவிய மோதலில் மொத்தம் 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் காலகட்டத்தில், இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் பகுதிகளில் மற்றவர்கள் நுழைய முடியாதபடி ‘தடை செய்யப்பட்ட பகுதி’ ஆக மாற்றியிருந்தனர். இந்தப் பூசல் இங்கிருந்த பள்ளிகளையும் பாதித்து, இறுதியில் அவை பாழடைந்தன.

கடந்த மாதம், இந்த இரு தரப்பினரும் ஒரு ‘ஜிர்கா’ (பழங்குடியின பஞ்சாயத்து) மூலம் தங்கள் பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டனர். இருப்பினும், நீதிமன்றங்கள் மற்றும் சட்டத் தடைகள் இருக்கும் நிலையில் ஜிர்கா நடத்தியது குறித்துக் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

By admin