பாஜக கிண்டல்
இந்த கருத்தை தொடர்ந்து பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை விமர்சித்தனர். குறிப்பாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ராகுலின் பேச்சைக் கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் மனதில் பயம், கோபம், வெறுப்பு ஆகியவை அன்பை உணரவும் வெளிப்படுத்தவும் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், உண்மையான இந்துவாக அவர்களை அந்த வெறுப்பிலிருந்து விடுவித்து அன்பின் மகிழ்ச்சியை உணரச் செய்வது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.