• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

சிவராசா அனோஜன்: செளதியில் இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது ஏன்?

Byadmin

Sep 22, 2026


செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன்

பட மூலாதாரம், FACEBOOK/ANOJAN

படக்குறிப்பு, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன்

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

முகமது நபி தொடர்பில் பேஸ்புக் ஊடாக தவறான கருத்தை பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

சிவராசா அனோஜனின் விடுதலைக்கான ராஜதந்திர ரீதியிலான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து, ஒரு சில மணிநேரத்தின் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடாத்திய சந்திப்பின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

செளதியில் அனோஜனை கைது செய்ய காரணம் என்ன?

இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது.

இந்த பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்து சென்றிருந்தார்கள்.

கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்தியிருந்தார்.

By admin