• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

சிவராசா அனோஜன் மரண தண்டனை ரத்து – இலங்கை தலைவர்கள் கூறுவது என்ன?

Byadmin

Oct 15, 2026


சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை

சௌதி அரேபியாவில் மரண தண்டனையில் இருந்து விடுப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு கிடைத்துள்ள தீர்ப்பு தொடர்பில் இலங்கையர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பெரும்பாலானோர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘நபிகள் நாயகத்திற்கு அவதூறு விளைவித்தார்’ என்ற குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தால் முதலில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் அபராதமும் விதித்திருந்த நிலையில், அந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி செய்யப்பட்ட மேன்முறையீட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, சௌதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனோஜனுக்கு நேற்றைய தினம் வழங்கப்பட்ட முழுமையான தீர்ப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், தீர்ப்பு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கையில் இருந்து சௌதி அரேபியா சென்று மேன்முறையீடு செய்த சட்ட வல்லுநர்கள் குழு தெரிவிக்கின்றது.

By admin