• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

ஜெயிலர் 2: ரஜினி எனும் பிராண்ட் 50 ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்திருப்பது எப்படி?

Byadmin

Oct 15, 2026


ரஜினிகாந்த், கோலிவுட், ஜெயிலர் 2, திரைப்படங்கள்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திரைப்படங்களில் அறிமுகமாகி 50 வருடங்களைக் கடந்தும், ஒரு ‘சோலோ ஹீரோவாக’ நீடிக்கிறார் 75 வயதான நடிகர் ரஜினிகாந்த்.

அவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், பெரும் பட்ஜெட்டில், முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு வெளியாகிறது. அவரது முந்தைய திரைப்படமான ‘கூலி’ பெற்ற கலவையான விமர்சனங்கள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை பெரிதாக பாதிக்கவில்லை.

இன்றும் பல புதிய இயக்குநர்கள் நேர்காணல்களில் ‘சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு என்னிடம் கதை உள்ளது’ எனக் கூறுகிறார்கள். ஆனால், அது ‘தந்தை’ கதாபாத்திரமோ அல்லது வேறு முக்கிய துணைக் கதாபாத்திரமாக அல்லாமல் ‘நாயகனாகவே’ அவரை முன்னிறுத்துகிறார்கள்.

பல இளம் நடிகர்கள் தான் ‘ரஜினி ரசிகன்’ என திரையில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பல பிற மொழி திரைப்படங்களின் ‘தமிழ்நாடு’ தொடர்பான சித்தரிப்புகளில் ஏதேனும் ஒரு ‘ஃபிரேம்’-இல் ரஜினியின் போஸ்டர் அல்லது புகைப்படம் இடம்பெறுகிறது.

ஃபோர்ப்ஸ்-இந்தியா இதழ் ரஜினி குறித்த ஒரு கட்டுரையில் (2013), “திரைப்படங்களுக்கு ஒரு ஆயுட்காலம் உண்டு, ஆனால் அவற்றின் நட்சத்திரங்களுக்கு இல்லை- அவர்கள் பிராண்டுகளாக மாறிவிடுகிறார்கள். ரஜினியின் ரசிகர்கள் திரைப்படங்களைப் பார்க்கச் செல்வதில்லை. அவர்கள் அவரை திரையில் பார்க்கதான் செல்கிறார்கள்” என்று குறிப்பிட்டது.

By admin