• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

“சுயமரியாதை தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்” – உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!

Byadmin

Aug 4, 2026


சர்ச்சை பேச்சு:

தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உதயநிதி பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாச பேச்சுகளை பொதுவெளியில் பேசி வருவதாக அமைச்சர் ரமேஷ், சேப்பாக்கம் தொகுதி MLA உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

By admin