• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

சூரி ஸ்ரீமதி: 92 வயதிலும் அறுவை சிகிச்சை செய்யும் பெண் மருத்துவரின் ஆரோக்கிய ரகசியம் என்ன?

Byadmin

Jul 27, 2026


டாக்டர் ஸ்ரீமதி, மருத்துவர், மருத்துவ சேவை, வயது மூப்பு
படக்குறிப்பு, 92 வயது மருத்துவர் டாக்டர் ஸ்ரீமதி

இதுவரை நீங்கள் சந்தித்த மருத்துவர்களில் மிக அதிக அனுபவம் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? 30 வருடம் என்பதாக இருக்குமா? 40? 50? ஆனால் சுமார் 70 வருட அனுபவம் உள்ள ஒரு மருத்துவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?

மருத்துவரின் வயது 70 அல்ல… துல்லியமாகச் சொன்னால் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பிறகு 68 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையாற்றிவரும் மருத்துவர் ஒருவரை நான் கண்டறிந்தேன்.

அத்தகைய அரிய பெண் மருத்துவர் ஹைதராபாத்தில் வசிக்கிறார். 92 வயதிலும் அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

1958-ல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று மருத்துவராக தனது பணியைத் தொடங்கிய டாக்டர் சூரி ஸ்ரீமதி, இன்றும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் தினமும் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டு, அவ்வப்போது சிசேரியன் அறுவை சிகிச்சைகளையும் செய்துகொண்டு, ஓர் இளம் மருத்துவரைப் போல மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார்.

நடப்பதற்கும், தங்களது அன்றாடக் கடமைகளைச் செய்வதற்கும் பலரும் சிரமப்படும் வயதில், இவர் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஸ்டெதாஸ்கோப்பை கையாள்வது மட்டுமல்லாமல், அறுவை சிகிச்சை கத்தியையும் கையாள்கிறார்.

By admin