• Fri. Oct 23rd, 2026

24×7 Live News

Apdin News

செம்மணியில் மீட்கப்பட்ட 583 எலும்புக்கூடுகளுக்கு உரியவர்களின் இறப்புக்கு காரணம் என்ன? மனிதப் புதைகுழி ஆய்வு அறிக்கையால் சர்ச்சை!

Byadmin

Oct 23, 2026


செம்மணி மனிதப் புதைகுழியில் நடைபெற்ற அகழ்வுப் பணியின்போது
படக்குறிப்பு, செம்மணி மனிதப் புதைகுழியில் நடைபெற்ற அகழ்வுப் பணியின்போது

    • எழுதியவர், ஜெ. பரணீதரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இலங்கையில் மிகவும் பாரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியானது, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புதிய அபிவிருத்தி வேலைகளுக்காக செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் குழிகள் வெட்டும்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பழைய மனிதப் புதைகுழிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக 110 நாட்கள் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின்போது கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை 583 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இந்த அகழ்வுப்பணிகளுக்கான ஆய்வுகளை இலங்கையின் புகழ்பெற்ற தொல்லியல் நிபுணரும் பல்கலைக்கழக பேராசிரியருமான ராஜ் சோமதேவ தலைமையிலான குழு மேற்கொண்டிருந்தது.

ஏற்கனவே அகழ்வுப்பணிகள் நடைபெறும் இடம் தவிர்த்து மேலும் பல இடங்களில் எலும்புக்கூடுகள் இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்திருந்தது. எனவே அகழ்வுப்பணிகளை எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தாது, தொடர்ச்சியாக சந்தேகத்துக்குரிய ஏனைய இடங்களிலும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என யுத்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.

எனினும் நீதிமன்றம் வழங்கியிருந்த அனுமதி ஆகஸ்ட் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்குதல் உட்பட சில காரணங்களினால் அகழ்வுப்பணிகள் மேற்கொண்டு நடைபெறவில்லை என அறியமுடிகிறது.

By admin