• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

செயற்கை நுண்ணறிவை மனிதர்களால் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியுமா? எச்சரிக்கும் நிபுணர்கள் கூறும் அஞ்சத்தக்க உதாரணம்

Byadmin

Sep 21, 2026


செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் மிக வேகமாக வளர்ந்து வருவதுதான் முக்கிய கவலையாக உள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் மிக வேகமாக வளர்ந்து வருவதுதான் முக்கிய கவலையாக உள்ளது (சித்தரிப்புப் படம்).
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1984-ஆம் ஆண்டு, ஆங்கிலத் திரைப்படமான ‘தி டெர்மினேட்டர்’ வெளியானது.

அந்தத் திரைப்படத்தில், கணினி மூலம் இயங்கும் பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்று தன்னை பற்றி உணருகிறது. மனிதர்களைத் தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக அது கருதத் தொடங்குகிறது. இதையடுத்து மனித இனத்தையே அழிக்க முயற்சிக்கிறது. இதன் விளைவாக அணு ஆயுதப் போர் ஏற்படுகிறது.

அந்தக் காலத்தில் இது வெறும் அறிவியல் புனைகதையாகவே இருந்தது. செயற்கை நுண்ணறிவு தன்னை உருவாக்கிய மனிதர்களுக்கு எதிராகத் திரும்புவது என்ற கற்பனையாக மட்டுமே பார்க்கப்பட்டது.

ஆனால், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, உலகின் முன்னணி ஏஐ ஆய்வாளர்களில் சிலர், அந்தக் கற்பனையின் சில அம்சங்கள் ஏதோ ஒரு வடிவில் நிஜமாகலாம் என எச்சரித்து வருகின்றனர்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டாரியோ அமோடெய், இந்தச் சூழலில் “ஏஐ-யின் முன்னேற்றத்துக்கு வேகம் நிர்ணயிப்பது” குறித்து பேசியுள்ளார். ஏஐ வளர்ச்சியை நிறுத்த வேண்டும் என்பது அவரது வாதம் அல்ல. மாறாக, ஏஐ-யின் வளர்ச்சி வேகம், அதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் பின்தங்கும் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதே அவரது கருத்து.

By admin