• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

சைபோர்க் கரப்பான்பூச்சிகளை ‘மீட்புப் பணிகளில் பயன்படுத்த முடியும்’ – புதிய ஆய்வில் தகவல்

Byadmin

Sep 2, 2026


பாராபோர்க், சைபோர்க், கரப்பான்பூச்சிகள்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒரு பிரமாண்ட கரப்பான்பூச்சி உங்களை நோக்கி ஓடி வருவது உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த ஊர்ந்து செல்லும் பூச்சிகள் ஒரு நாள் மீட்புப் பணிகளில் வெளிச்சம் பெறாத ஹீரோக்களாக உருவெடுக்கக்கூடும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவும் ‘சைபோர்க்’ கரப்பான்பூச்சிகளை உருவாக்கியுள்ளனர். இவை ‘பாராபோர்க்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. பாராமெடிக் சைபோர்க்குகள் என்பதன் சுருக்கம் தான் இந்தச் சொல்.

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நிலத்தைத் தோண்டி வாழும் பிரமாண்ட கரப்பான்பூச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். 8.5 செமீ வரை வளரக்கூடிய இவை உலகின் அதிக எடை கொண்ட கரப்பான்பூச்சி வகையாகும்.

ஒவ்வொரு பூச்சியின் மீதும், கேமரா அல்லது மருந்தைச் செலுத்துவதற்கான ஊசி போன்ற கருவி அடங்கிய ஒரு சிறிய முதுகுப் பை பொருத்தப்பட்டிருந்தது.

பாராபோர்க், சைர்க், கரப்பான்பூச்சிகள்

பட மூலாதாரம், Reuters

மின் சமிக்ஞைகளைச் சுமந்து செல்லும் சிறிய எலக்ட்ரோடுகள் கரப்பான் பூச்சியின் உடலில் பொருத்தப்பட்டன. பின்னர் ஆபரேட்டர்கள் அதன் நரம்பியல் மண்டலத்தில் சிறிய சமிக்ஞைகளை அனுப்ப முடியும். இதன் மூலம் தொலைதூரத்தில் இருந்தே அவற்றை கேமிங் கன்ட்ரோலர் மூலம் இயக்க முடியும்.

By admin