சையத் முஷ்டாக் அலி கோப்பை இன்றைய ஆட்டத்தில் பீகாரை வீழ்ந்து தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
2026-27 சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் எலைட் குரூப் ‘பி’ பிரிவு போட்டிகள் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பிரிவில் மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. எலைட் குரூப் ‘பி’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு – பீகார் அணிகள் மோதி வருகின்றன.
பேட்டிங்
இந்தூரின் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
பேட்டிங் இறங்கிய தமிழ்நாடு அணியின் அமித் சத்விக் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.
சச்சின் பி. 41 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அசத்தினார். ஆண்ட்ரே சித்தார்த் 34 ரன்களும், ரிதிக் ஈஸ்வரன் 31 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
இதையடுத்து பீகார் அணி 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
வெற்றி
ஆனால் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பீகார் அணியில் அல்டமிஷ் அஷ்ரப் 45 ரன்களும், ஆஷிஷ் குமார் 33 ரன்களும், பியூஷ் சிங் 27 ரன்களும் எடுத்தனர்.
தமிழ்நாடு சார்பில் சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த் தலா 3 விக்கெட்டுகளும், ஆர். ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும், அதிசயராஜ் டேவிட்சன், குர்ஜப்னீத் சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் தமிழ்நாடு அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் பீகாரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.