• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

சோனியா காந்தி ராஜீவ் காந்தியுடனான தனது முதல் சந்திப்பு என்ன கூறியுள்ளார்? இருவரது காதலை பேசும் சுய சரிதை

Byadmin

Oct 24, 2026


1989-ல் தனது கணவர் ராஜீவ் காந்தியுடன் சோனியா காந்தி

படக்குறிப்பு, 1989-ல் தனது கணவர் ராஜீவ் காந்தியுடன் சோனியா காந்தி
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் தொடங்கிய தனது காதல் கதையின் நினைவுகளை, சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் சோனியா காந்தி முதல்முறையாகப் பதிவிட்டுள்ளார்.

தனது முதல் பதிவில், கணவர் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த தருணத்தையும், அவருடன் பழகத் தொடங்கிய ஆரம்ப நாட்களையும் நினைவுகூர்ந்துள்ளார்.

நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ‘உரிமை உணர்வு: அன்பின் ஒரு பயணம்’ (Belonging: A Journey of Love) என்ற தனது புத்தகத்தை முன்னிட்டு, ராஜீவ் காந்தியுடனான நினைவுகளை சோனியா காந்தி பகிர்ந்துள்ளார்.

தனது புதிய புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிய சோனியா காந்தி, அதில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களைக் காட்டி, “அவர் (ராஜீவ் காந்தி) உண்மையிலேயே மிகவும் அழகாக இருந்தார். ஆனால், அவரது மென்மையான குணம்தான் என்னை மிகவும் கவர்ந்தது,” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர், “அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் உணவு அவ்வளவு சுவையாக இருக்காது. இப்போது இருப்பதைப் போல அதிகமான உணவகங்களும் அப்போது இல்லை. அதனால், இத்தாலிய உணவின் சுவைக்கு நெருக்கமான உணவுகளைத் தேடுவேன்,” என்று தெரிவித்துள்ளார்.



By admin