• Sat. May 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஜனநாயகன் பட லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Byadmin

May 2, 2026


நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் கடந்த மாதம் 3-ம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.

படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையே, இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

By admin