• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துச் செய்திக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிப்பு

Byadmin

May 13, 2026


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துச் செய்திக்கு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,

“தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள கௌரவ சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் மக்களிடையேயான நீடித்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன” என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

“இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துக்களால் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களது கனிவான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

By admin