• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

ஜப்பானில் வரலாறு காணாத மக்கள் தொகை சரிவு; 5 ஆண்டுகளில் 30 இலட்சம் குறைவு!

Byadmin

May 30, 2026


ஜப்பானின் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டில் ஜப்பானின் மொத்த மக்கள்தொகை 123 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 இலட்சத்திற்கும் அதிகமான சரிவாகும்.

1920ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் பதிவான மிகப்பெரிய மக்கள்தொகை வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

ஜப்பான் தற்போது முதியோர் எண்ணிக்கை அதிகரித்தல், பிறப்பு விகிதம் குறைதல் போன்ற பல்வேறு மக்கள்தொகைச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகிலேயே மிகவும் குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகக் காணப்படுகிறது.

இந்த மக்கள்தொகை வீழ்ச்சியை சமாளிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து குடியேறிகளை அதிகளவில் ஏற்க வேண்டும் என்ற கருத்து பல தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

எனினும், ஜப்பானியப் பிரதமர் சனாயே தக்காய்ச்சி (Sanae Takaichi), வெளிநாட்டு குடியேற்றம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதனால், மக்கள் தொகை குறைவு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை ஜப்பான் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது குறித்து சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.

By admin