• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

ஜஸ்டின் பிரபாகரனுக்கு தனது இசையில் பிடித்த 10 பாடல்கள் எவை?

Byadmin

Jun 10, 2026


'நீலோத்தி முதல் அடியே அழகே வரை' -  ஜஸ்டின் பிரபாகரனின் 10 சிறந்த பாடல்கள்

பட மூலாதாரம், Instagram/Prabhakaranjustin

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் சத்தம் இல்லாமல் இசைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினி படத்தில் தொடங்கிய அவரின் இசைப்பயணம், சிறை பட நீலோத்தி பாடல் ஹிட் வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன், தமிழில் மட்டுமல்ல, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட், பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வந்த ஹிருதயபூர்வம், நிவன்பாலி நடிப்பில் வந்த சர்வம்மாயா உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தவர்.

ஒருநாள் கூத்து, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மான்ஸ்டர், நாடோடிகள் 2, கட்டாகுஸ்தி, பர்ஹானா, ஏஸ், இறுகப்பற்று, ஹேப்பிராஜ், சிறை உட்பட 35க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மதுரையில் பிறந்து, திரைப்படக்கல்லூரியில் படித்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஜஸ்டின் பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள்

‘காயங்களை மீறி வெற்றி பெற்றார்’ – இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

பட மூலாதாரம், Instagram/Prabhakaranjustin

படக்குறிப்பு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

ஜஸ்டின்பிரபாகரனுடன் அதிக படங்களில் பணியாற்றியவர்களில் ஒருவரான இயக்குனர் நெல்சன் வெங்கடசேனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

By admin