• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் என்ன நடந்தது? காவல்துறை தடியடி ஏன்?

Byadmin

Aug 11, 2026


ஜார்கண்ட்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல், பல தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தில்னவாஸ் பாஷா, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், பல போராட்டக்காரர்கள் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹதோவும் இந்த பேரணியில் இணைந்தார். முள்வேலிகள் மற்றும் தடுப்புகளைத் தாண்டி வந்ததாக அவர் கூறினார்.

By admin