• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

ஜிடிஏ 6 வெளியீட்டை ஒட்டி பிரத்யேக டூயல்சென்ஸ் பி.எஸ். 5 கண்ட்ரோலர்கள் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?

Byadmin

Sep 5, 2026


சோனி நிறுவனம், பிளே ஸ்டேஷன் 5 (PS5)-க்கான GTA 6 கேமின் பிரத்யேக டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களை அறிவித்துள்ளது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் GTA 6-க்கான முன்பதிவுகளை அறிவித்துள்ளது.

சமீபத்திய ஸ்டேட் ஆஃப் பிளே நிகழ்வில், சோனி பல விளையாட்டுகளை அறிவித்துள்ளது. இத்துடன், GTA 6 விளையாட்டின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வகைகள் இருக்கும். இந்த இரண்டு டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களும் நவம்பர் 19, 2026 முதல் கிடைக்கும். இவற்றின் விலை 12,480 யென் (இந்திய மதிப்பில் ரூ. 7547) என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் PS5-க்கான கூடுதல் பொத்தான்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும்:

இந்த புதிய டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் சேகரிப்பாளர்களை இலக்காக கொண்டவை, மேலும் இவை குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கக்கூடும்.

புதிய சோனி டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் செப்டம்பர் 10, 2026 முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இது பிளே ஸ்டேஷன் டைரக்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும், ஆனால் இதன் ஸ்டாக் குறைவாகவே இருக்கும். இரண்டு கன்ட்ரோலர்களும் வண்ண வடிவமைப்பில் மிகவும் அழகாக தெரிகின்றன. இதன் அடிப்பகுதியில் ஊதா நிற சாயல்களும், ரிமோட்டின் மேற்புறத்தில் VI பிராண்டிங்கும் இடம்பெற்றுள்ளன.

வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பு:

இந்த வடிவமைப்பு வைஸ் சிட்டியை பெரிதும் தழுவி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. GTA VI விளையாட்டில் DualSense-இன் அடாப்டிவ் ட்ரிக்கர்களும் ஹேப்டிக் ஃபீட்பேக்கும் முக்கிய பங்கு வகிக்கும் என்று சோனி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சுடுதலாக, வாகனம் ஓட்டுதல் போன்ற அனுபவங்களில் இந்த அம்சங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த விளையாட்டை சுற்றியுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க, சோனி மற்றும் ராக்ஸ்டார் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன என்பதை இது காட்டுகிறது.

மேலும், இது சோனிக்கு அதிக PS5 கன்சோல்களையும், DualSense கன்ட்ரோலர்களையும் விற்பனை செய்து, அதன் வருவாயை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

By admin