• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளத்தில் மீண்டும் வெள்ள ஆபத்து: பனிப்பாறை ஏரி உடைய வாய்ப்புள்ளதால் மீட்புப் பணியாளர்களுக்கு புதிய சிக்கல்

Byadmin

Sep 5, 2026


சீனாவின் நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது ‘லாக் டோ’ தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Guoxiong Zheng Via FFD Nepal

சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது ‘லாக் டோ’ தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வெள்ள முன்னறிவிப்புத் துறையின் தலைவரும் மூத்த நீரியல் நிபுணருமான வினோத் பராஜுலி கூறுகையில், சீனாவிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்தப் பனிப்பாறை ஏரியில் சுமார் 6,50,000 கன மீட்டர் நீர் சேர்ந்துள்ளது என்றார்.

“இந்தப் பனிப்பாறை ஏரி முழுமையாக நிரம்பியுள்ளதால், அது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது” என்று அவர் பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.

ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், குறிப்பாக நீர்மின் திட்டத்தின் சுரங்கங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளவர்கள், விழிப்புடன் இருக்குமாறு பராஜுலி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தப் பனிப்பாறை ஏரி எப்போது முழுமையாக நிரம்பும், எப்போது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin