• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

ஜியோ பங்குச்சந்தை அறிமுகம் இந்தியாவில் குறைந்த கட்டண இணைய சேவைக்கு முடிவு கட்டுமா?

Byadmin

Oct 27, 2026


3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ, இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனையாகும்.

படக்குறிப்பு, 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ, இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனையாகும்.

    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, மும்பை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், புதன்கிழமை பங்குச்சந்தையில் அறிமுகமாகிறது.

இந்தியப் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்து வரும் நிலையிலும், ஜியோ நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 320 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (IPO) பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடு இதுவாகும்.

உலகின் முன்னணி முதலீட்டு நிதி மேலாளர்கள், இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் இதில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

அக்டோபர் 21ஆம் தேதி பங்குகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே, விற்பனைக்கு வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையைவிட அதிகமான பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனங்களில் ஒன்றாகும். குறைந்த கட்டணத்தில் மொபைல் இணையச் சேவையை வழங்கும் இந்த நிறுவனத்திற்கு 50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஜியோவின் அபரிமிதமான வளர்ச்சி பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.



By admin