• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

ஜெட்டாவிற்கு நவ. 24 வரை விமான சேவைகளை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

Byadmin

Nov 21, 2026


இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்:

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள பதிவில், “அந்த பிராந்தியத்தில் நிலவும் சூழல் காரணமாக, ஜெட்டாவிற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் நவம்பர் 24 வரை இடைநிறுத்தப்படுகின்றன. ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகள் நவம்பர் 30, 2026 வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

நவம்பர் 20, 2026 அன்று அல்லது அதற்கு முன்பாக, நவம்பர் 24, 2026 வரை ஜெட்டாவிற்கு பயணம் செய்ய அல்லது அங்கிருந்து வர உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்துள்ள பயணிகள், பயண தேதியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயணத்தை ரத்து செய்துவிட்டு முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இதே வசதி, நவம்பர் 10, 2026 அன்று அல்லது அதற்கு முன்பாக, நவம்பர் 30, 2026 வரை ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்குப் பயணம் செய்ய அல்லது அங்கிருந்து வர உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin