• Thu. May 7th, 2026

24×7 Live News

Apdin News

ஜோதிகா – சோனாக்ஷி சின்கா இணைந்து மிரட்டும் ‘சிஸ்டம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Byadmin

May 7, 2026


பொலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா – நடிகை ஜோதிகா இணைந்து கதையின் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘சிஸ்டம்’ எனும் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அஸ்வினி அய்யர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிஸ்டம்’ திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா, அஷ்தோஷ் கோவாரிகர் , ப்ரீத்தி அகர்வால் , ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஸ்ரா,  கௌரவ் பாண்டே,  சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளின் பின்னணியில் பரபரப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை பவேஜா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பம்மி பவேஜா – ஹர்மன் பவேஜா -சுமிதா பாலிகா இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படம் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படம் அதிகாரமும் செல்வாக்கும் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகத்தில்.. நீதி மற்றும் உண்மைக்காக களம் இறங்கி போராடும் இரு பெண்மணிகளின் வாழ்வியலை விவரிக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

The post ஜோதிகா – சோனாக்ஷி சின்கா இணைந்து மிரட்டும் ‘சிஸ்டம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு appeared first on Vanakkam London.

By admin