• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

ஞானேஸ்வரி: 40 ஏக்கர் தோட்டத்தில் காணாமல் போன சிறுமி – ஒரு மாதமாகியும் கிடைக்காதது ஏன்?

Byadmin

Jul 7, 2026


ஞானேஸ்வரியின்  அம்மா பவானி
படக்குறிப்பு, ஞானேஸ்வரியின் புகைப்படத்துடன் அவரது அம்மா பவானி

ஒவ்வொரு முறை போன் ஒலிக்கும் போதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. “உங்கள் குழந்தை கிடைத்துவிட்டது” என்று யாராவது சொல்ல மாட்டார்களா என ஞானேஸ்வரியின் பெற்றோர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு மாதம் கடந்தும், அந்த ஒரு போன் கால் இன்னும் வரவில்லை.

ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டம் சி.எச். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஞானேஸ்வரி காணாமல் போய், ஜூலை 6-ஆம் தேதியோடு ஒரு மாதமாகிறது.

கடந்த ஒரு மாதமாக காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வரும் வேளையில், தங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற ஒரு தகவலுக்காக அக்குழந்தையின் பெற்றோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

காவல்துறையினர் காடுகளில் தேடினர். மலைகள், கிணறுகள் மற்றும் குளங்களில் தேடுதல் நடத்தினர். ட்ரோன்கள் மூலமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

By admin