• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

Byadmin

Jul 7, 2026


முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்கு பிள்ளைகளே. அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது பொலிஸாரும் முன்னைய அரசியல்வாதிகளுமே என நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மற்றும் இன்று (6) அடுத்தடுத்து இடம்பெற்ற கைதிகளுக்கிடையிலான மோதல் சம்பவங்களில் சுமார் 30 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சிறைச்சாலைக்கு முன்பாக சிறைக்கைதிகளின் உறவினர்கள் திரண்டு நின்று, சிறைக்குள் கைதிகளாக உள்ள தமது உறவினர்களின் நிலை குறித்து பதற்றத்தை வெளிப்படுத்தியதில் அப்பகுதியில் பரபரப்பும் மேலும் குழப்பகரமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin