1
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனை தமிழ் தேசிய பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.
இதன்போது தான் எழுதிய “இலங்கைத் தமிழர் பிரச்னை : இந்தியாவின் துரோகக் கொள்கை” என்ற நூலினை தமிழ் தேசிய பேரவையினருக்கு பழ.நெடுமாறன் வழங்கிவைத்தார்.











