• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

போருக்குப் பிறகு இரானின் புதிய ஆட்சி எவ்வாறு மாறியுள்ளது? இதனால் யாருக்கு சாதகம்?

Byadmin

Jul 7, 2026


இரானின் புதிய ஆட்சி முந்தைய ஆட்சியிலிருந்து எவ்வாறு மிகவும் வேறுபட்டது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பால் ஆடம்ஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கடந்த மாதம் வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு விருந்தின் போது இரானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, ​​பலரும் அதில் ஒரு முரண்பாட்டைக் கண்டனர்.

அவருக்கு விருந்தளித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோங், டொனால்ட் டிரம்ப் தனது மனதை மாற்றுவதற்கு முன்பாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை உறுதி செய்ய விரும்பியிருக்கலாம், மேலும் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி மண்டபம் அவரது விருந்தினரைக் கவரும் என்று கணக்கு போட்டிருக்கலாம்.

ஆனால் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது, அந்த ஒன்றரை பக்க ஒப்பந்தத்திற்கும் முதலாம் உலகப் போரின் முடிவில் 1919-இல் கையெழுத்தான மிக நீண்ட வெர்சாய்ஸ் உடன்படிக்கைக்கும் இடையே தவிர்க்க முடியாமல் ஒப்பீடுகளை தூண்டியது. 1919 உடன்படிக்கை ஐரோப்பாவை மறுவடிவமைத்தது, ஆனால் பெரும் இழப்பீடுகளுக்கான அதன் அம்சங்கள் கோபமும் கசப்பும் நிறைந்த ஜெர்மனியை விட்டுச் சென்றதுடன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்க உதவியது.

பல வழிகளில் வேறுபட்ட இந்த இரான் ஒப்பந்தம், அதேபோன்றதொரு விதிகொண்ட ஓர் ஒப்பந்தமாக பார்க்கப்படுமா?

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு பலவீனமான போர்நிறுத்தம் ஓரளவுக்கு நீடிக்கிறது. ஆனால் ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட சில மோதல்களுக்கு பிறகும், போருக்கு வழிவகுத்த எந்தவொரு பிரச்னையும் தீர்க்கப்படுவதை நெருங்காத நிலையிலும் மத்திய கிழக்கின் நிலைமை முன்பு இருந்ததைப் போலவே ஆபத்தானதாகவே தோன்றுகிறது.

By admin