• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட நோயல் டாடா எதிர்ப்பு ஏன்? 5 காரணங்கள்

Byadmin

Sep 19, 2026


டாடா சன்ஸ் நிறுவனம், பங்குச் சந்தை, நோயல் டாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாடா சன்ஸ் நிறுவனத்தை பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா நிறுவனத்தின் முதன்மை ஹோல்டிங் நிறுவனமான ‘டாடா சன்ஸ்’ பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் விவகாரம் சிக்கலாகி வருகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் ‘டாடா டிரஸ்ட்ஸ்’ 66% பங்குகளை வைத்துள்ளது. டாடா சன்ஸ் இயக்குநர்கள் கூட்டத்தில், நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், டாடா டிரஸ்ட்ஸின் தலைவரான நோயல் டாடா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் ஏன் எதிர்க்கிறார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

பிரிட்டிஷ் நாளிதழான ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ ஒரு அறிக்கையில் “பகுப்பாய்வாளர்களின் கணிப்புப்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 120 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்ற நிலையில், இது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ ஆக மாறும். இதனால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சிலரின் கைகளில் மட்டுமே இருந்து வந்த டாடா குழுமத்தின் உரிமை மற்றும் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

டாடா டிரஸ்ட்ஸ் தகவல்படி, செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

By admin