• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி

Byadmin

Oct 15, 2026


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்சின் அலெக்ஸ் லேனியர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-11 என வென்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 21-15, 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், பி.வி.சிந்து, இரட்டையரில் சாதவிக் – சிராக் ஜோடி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.

By admin