• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1 லட்சம் ஆசிரியர்கள்: என்ன சிக்கல்?

Byadmin

Oct 15, 2026


ஆசிரியர் தேர்வு வாரியம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைந்துவிட்டேன். கடந்த இரு நாட்களாக கடும் மனஉளைச்சலில் தவிக்கிறேன். இப்போதே ஐம்பது வயதாகிவிட்டது. அடுத்த தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது”

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பிபிசி தமிழிடம் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ‘டெட்’ தேர்வில் சுமார் 2.20 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் சுமார் 1.08 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

” தோல்வியடைந்தவர்களை ஒதுக்க மாட்டோம். அவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு என்ன சிக்கல்?

‘இந்தியாவில் ஆசிரியர் பணியில் ஒருவர் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

By admin