• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

‘முஸ்லிமாக மதம் மாறிய இந்து இட ஒதுக்கீடு பெற முடியாது’ – உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

Byadmin

Oct 15, 2026


'முஸ்லிமாக மதம் மாறிய இந்து இட ஒதுக்கீடு பெற முடியாது'  -  உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற உரிமையில்லை என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 15) உறுதி செய்தது.

லைவ் லா செய்தியின்படி நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

“ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் மட்டுமே, மாநிலத்தில் உள்ள ஏழு முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராகிவிட முடியாது. அவர் முன்பு கொண்டிருந்த சாதி அந்தஸ்தை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அந்தஸ்தாக மாற்றிக் கொள்ள முடியாது. அதேபோல், அவரது மத அமைப்பு மட்டும் அவர் அத்தகைய இடஒதுக்கீட்டைப் பெறத் தகுதியானவர் என்பதை இறுதியாகத் தீர்மானிக்கவும் முடியாது” என்று நீதிபதிகள் கூறியதாக லைவ் லா செய்தி கூறுகிறது.

மேலும் ”அரசியலமைப்பு சட்டப்படி, இந்து, சீக்கியம் அல்லது புத்த மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர் பட்டியலினத்தவராகக் கருதப்பட முடியாது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

By admin