• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ-வுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்

Byadmin

Oct 15, 2026


சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவகுமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.சிவகுமார் 14,034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் வழக்கு

அவரது வெற்றியை எதிர்த்து, இரண்டாம் இடத்தை பிடித்த திமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தவெக எம்எல்ஏ கே.சிவகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே. சிவகுமாரின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

By admin