• Mon. Oct 12th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி: உச்ச நீதிமன்றம் நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி – என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

Oct 12, 2026


எதிர்க்கட்சிகளின் பேரணி உச்ச நீதிமன்றத்திற்கு முன்பே தடுப்பு - டெல்லியில் என்ன நடக்கிறது? நேரலை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி உச்ச நீதிமன்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களை அதற்கு முன்பே மண்டி ஹவுஸ் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

பிபிசி செய்தியாளர் விஷ்ணுகாந்த் திவாரி அளித்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் சிறிது நேரம் சாலையில் அமர்ந்திருந்த பிறகு, மாலை 6 மணியளவில் அங்கிருந்து திரும்பத் தொடங்கினர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் நோக்கி ராகுல் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணி - என்ன நடக்கிறது? நேரலை

இதற்கிடையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘லைவ் லா’ மற்றும் ‘பார் அண்ட் பெஞ்ச்’ ஆகியவற்றின் தகவல்படி, வாக்காளர் பட்டியலின் ‘சிறப்பு தீவிர திருத்த’ (எஸ்ஐஆர்) நடவடிக்கையின்போது வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதாகவும், முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

By admin