• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி: தர்ணா செய்த ராகுல், பிரியங்கா இருவரையும் காவல்துறை அப்புறப்படுத்திய காட்சி

Byadmin

Oct 7, 2026


காணொளிக் குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியை அப்புறப்படுத்திய டெல்லி காவல்துறை

டெல்லி: தர்ணா செய்த ராகுல், பிரியங்காவை காவல்துறை அப்புறப்படுத்திய காட்சி

பிரசுரிக்கப்பட்டது

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையினர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர்.

ராகுல் காந்தி காவலில் எடுக்கப்பட்டு கிங்ஸ்வே கேம்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ராகுல் காந்தியை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் வீடியோவை வெளியிட்டு, ‘எல்லாம் நினைவில் கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் தனது முந்தைய எக்ஸ் பதிவில், “மோதியும் ஷாவும் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்கு போலீசாரை அனுப்பியுள்ளனர், அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி.க்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். போலீஸ் அடக்குமுறை மூலம் குரலை அடக்க மோதி விரும்புகிறார், ஆனால் நினைவில் கொள்ளுங்கள் – இந்த கர்ஜனை இப்போது அடக்கப்படாது, துரோகி ஞானேஷ் வெளியேறத்தான் வேண்டும்” என்று பதிவிட்டிருந்தது.

முன்னதாக, தேர்தல் ஆணையத்தை நோக்கிய பேரணி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி வத்ராவும் கடந்த பல மணிநேரங்களாக அகிய இந்திய வானொலி நிலைய வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர்.

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin