• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி விமான நிலையத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற நபரால் பரபரப்பு

Byadmin

Nov 19, 2026


சி.ஐ.எஸ்.எஃப். விளக்கம்:

“இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம்-3 புறப்பாட்டு வாயிலில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள், மிகுந்த விழிப்புணர்வுடனும் துரிதமாகவும் செயல்பட்டு, முறையான பயண ஆவணங்கள் இன்றி உள்ளே நுழைய முயன்ற நபரை பிடித்துள்ளனர்” என்று சி.ஐ.எஸ்.எஃப். தெரிவித்தது.

அந்த காணொளியில், பாதுகாப்பு பணியாளர்கள் அந்த நபரை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்த முயற்சிப்பதும், அவர் அதையும் மீறி உள்ளே நுழைய முற்படுவதும் பதிவாகியுள்ளது. முனையத்திற்குள் சில மீட்டர் தூரம் ஓடிய அந்த நபரை, ஆயுதம் ஏந்திய சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் மற்ற வீரர்களுடன் இணைந்து மடக்கிப் பிடித்தார்.

“விரைவு எதிர்வினைப் படையினரின் (QRT) சரியான நேர உதவியுடன், அந்த நபர் சில நொடிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத நுழைவு தடுக்கப்பட்டு, ஏற்படவிருந்த பாதுகாப்பு மீறல் தவிர்க்கப்பட்டது” என்று சி.ஐ.எஸ்.எஃப். தெரிவித்துள்ளது.

By admin