• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

டோரதி விமர்சனம்: வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்?

Byadmin

Sep 26, 2026


'டோரதி திரைப்படம் எப்படி உள்ளது? - ஊடக விமர்சனம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் நடித்துள்ள டோரதி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 10வது திரைப்படமாக டோரதி அமைந்துள்ளது.

சுப்பு என்கிற கதாபாத்திரத்தில் சனந்த்தும், கார்த்தி என்கிற கதாபாத்திரத்தில் ரிஷிகாந்தும் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் ‘டோரதி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்பட வெளியீட்டுக்கு முன்னதாகவே வெளியான ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ பாடல்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றிருந்தன.

டோரதி திரைப்படம் எப்படி உள்ளது? ஊடகங்களில் வந்துள்ள விமர்சனங்களைத் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கதைக்களம் என்ன?

1980களில் செவப்பட்டி என்கிற ஊரில் கதை தொடங்குகிறது. சுப்பு மற்றும் கார்த்தி சிறு வயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

பெண்களே இல்லாத ஒரு குடும்பத்தில், ஆணாதிக்கம் கொண்ட ஆண்களுக்கு மத்தியில் சுப்பு வளர்ந்தார். அந்தக் குடும்பத்தை அவரது தந்தையான ‘விசில்’ வீரய்யா வழிநடத்துகிறார். வீரய்யா கதாபாத்திரத்தில் நடிகர் முத்துக்குமார் நடித்துள்ளார்.

By admin