• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

“தயார் நிலையில் 12 அணு ஆயுதங்கள்” – இந்தியா பற்றிய சிப்ரி அறிக்கை கூறுவது என்ன?

Byadmin

Jun 11, 2026


அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம், RAVEENDRAN/AFP via Getty Images

படக்குறிப்பு, அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை (சித்தரிப்புப் படம்)

    • எழுதியவர், சிவாங்கி ஜெய்ஸ்வால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஸ்வீடனின் சர்வதேச சுதந்திர சிந்தனைக் குழுவான ‘சிப்ரி’ (SIPRI) அதாவது ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா முதன்முறையாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 அணு ஆயுதங்களை முன் களத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

இருப்பினும், 12 அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

ஜூன் 8 அன்று வெளியிடப்பட்ட சிப்ரியின் அறிக்கையின்படி, இந்தியாவில் 178 அணு ஆயுதங்கள் சேமிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன, அவை தேவைப்படும்போது பயன்படுத்தப்படலாம். அதே நேரத்தில், 12 அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவிடம் மொத்தம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 180 ஆக இருந்தது மற்றும் அனைத்தும் சேமிப்பகத்தில் இருந்தன.

பத்திரிகையாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான ராகுல் பேடி, அமைதிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிலைநிறுத்தலை ஆச்சரியமளிப்பதாகக் கருதுகிறார்.

அவர், “இந்த அணு ஆயுதங்கள் முழுத் தயாரிப்புடன் ரோந்து செல்லும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன” என்று மதிப்பிடுகிறார்.

By admin