• Fri. Oct 16th, 2026

24×7 Live News

Apdin News

தருமபுரி: 13 ஆண்டுகளாகக் கிடைக்காத மகனை ஏஐ உதவியுடன் கண்டுபிடித்து தாயுடன் சேர்த்து வைத்த போலீஸ்

Byadmin

Oct 16, 2026


தன் குடும்பத்துடன் சேர்ந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும், தன்னுடைய தந்தை இறந்து விட்ட தகவல் தன்னைப் பெரிதும் பாதித்திருப்பதாக பிபிசியிடம் கூறினார் மகன் தீபக் ராஜா.
படக்குறிப்பு, தீபக் ராஜா

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தருமபுரியில் தனது தாயிடம் கோபித்துக் கொண்டு, 13 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி தொடர்பின்றி இருந்த மகன், காவல்துறையினரால் திருப்பூரில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

ஓர் ஆண்டுக்குள் அடுத்தடுத்து கணவர் மற்றும் தாயை இழந்து வேதனையில் இருந்த தனக்குத் தனது மகன் மீண்டும் கிடைத்தது பெருமகிழ்ச்சியாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார் தாய் கிரிஜா.

ஆனால் தனது குடும்பத்துடன் சேர்ந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும், தந்தை இறந்துவிட்ட தகவல் தன்னைப் பெரிதும் பாதித்திருப்பதாக பிபிசியிடம் கூறினார் மகன் தீபக் ராஜா.

நவீன ஏஐ தொழில்நுட்பத்தால் காணாமல் போனவரின் தற்போதைய வயதுக்குரிய புகைப்படத்தை வரைந்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஆதார் எண்ணுக்குப் பெறப்பட்ட சிம் கார்டை வைத்து, அந்த எண்ணை வைத்து அவரைக் கண்டுபிடித்ததாக இவர்களை இணைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்த காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தருமபுரி காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கிரிஜா. இந்த தம்பதியினருக்கு, 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இவர்களின் இரண்டாவது மகன் தீபக்ராஜா

திட்டியதால் 17 வயதில் சென்ற மகனை 30 வயதில் மீண்டும் சந்தித்த தாய்

தருமபுரி காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கிரிஜா. இந்தத் தம்பதியினருக்கு, 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இவர்களின் இரண்டாவது மகன் தீபக்ராஜா, கடந்த 2014ஆம் ஆண்டில் வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்றவர், திரும்பி வரவேயில்லை.

By admin