• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

தலைமை ஆசிரியருக்கு எதிராக ஒன்றுபட்டு போராடிய இருவர் காதலித்து தம்பதியரான கதை

Byadmin

Sep 20, 2026


சியா மற்றும் யுஸ்ரோன் கேமராவைப் பார்த்துப் புன்னகைக்கின்றனர். சியா மங்கலான இளஞ்சிவப்பு நிற ஹிஜாப் அணிந்துள்ளார். அவரது தலையில் சன்கிளாஸ் உள்ளது. யுஸ்ரோன் கழுத்துப் பகுதி திறந்த வெள்ளைச் சட்டை அணிந்துள்ளார்.
படக்குறிப்பு, லொம்போக் தீவில் உள்ள ஓர் உறைவிடப் பள்ளியில் சியாவும் யுஸ்ரோனும் சிறந்த மாணவர்களாகத் திகழ்ந்தனர்.

    • எழுதியவர், எண்டாங் நூர்தின் மற்றும் ரெபேக்கா ஹென்ஷ்கே, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் வன்கொடுமை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

தொலைபேசியின் மறுமுனையில் கேட்ட அந்தக் குரல் யுஸ்ரோன் அஸ்ஸாஹிதியின் வயிற்றைப் புரட்டிப் போட்டது. அவசரமாகத் தன்னை அழைக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பியிருந்த தனது சகோதரியின் எண்ணுக்குத்தான் அவர் அழைத்திருந்தார். ஆனால், மறுமுனையில் பேசியது அவரது சகோதரி அல்ல – யுஸ்ரோனின் முன்னாள் தலைமை ஆசிரியர். அவர் யுஸ்ரோனின் குடும்ப வீட்டில் இருந்தார்.

“அவர் என்ன பேச விரும்புகிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. மிக சரியாகத் தெரியும்,” என்கிறார் யுஸ்ரோன்.

மாணவர்களால் “அபா” (“தந்தை”) என்று அழைக்கப்பட்ட அஹ்மத் இமானுத்தீன் தனது நற்பெயரை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது. இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளி ஒன்றின் மதிக்கப்பட்ட தலைவராக அவர் இருந்தார். ஆனால், தான் பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறும் பல மாணவர்களிடமிருந்து யுஸ்ரானும் அவரது பழைய பள்ளி நண்பர்களும் வாக்குமூலங்களைத் திரட்டி வருகிறார்கள் என்பதை அபா கண்டுபிடித்திருந்தார்.

இஸ்லாமிய உறைவிடப் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்துமீறல், இந்தோனேசியாவின் தேசிய பெண்களுக்கு எதிரான வன்முறை ஆணையத்தால் தேசிய அவசரநிலையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுமாறு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைக்கப்படுவதாலும், அமைதியாக இருக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாலும் பல வழக்குகள் நீதிமன்றத்தை எட்டுவதில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

By admin