• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

தவெக எம்எல்ஏ-வின் ‘பேரம்’ புகார் தொடர்பாக தொலைக்காட்சி நெறியாளரிடம் போலீஸ் விசாரணை – பின்னணி என்ன?

Byadmin

Jul 18, 2026


புதிய தலைமுறை' தொலைக்காட்சி நெறியாளர் விஜயன்

பட மூலாதாரம், VijayanRamalingam/Facebook

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

நெறியாளரை காவல்துறை அலைக்கழித்ததாகக் கூறி பத்திரிகையாளர் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

’35 கோடி ரூபாய் தருவதாக பேரம்’

தவெக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த 29ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் ஒரு முக்கியக் கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால், தான் வேறு பணிகளில் இருப்பதாகக் கூறி அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள இளையராஜா, “இருந்தும் அந்த நபர் தன்னை மீண்டும் தொடர்புகொண்டு சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகப் பேசினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

By admin